புதிய கொரோனா தடுப்பு மருந்து

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ சார்பில் கண்டறியப்பட்டுள்ள ‘டியோக்ஸி டி குளுக்கோஸ்’ என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து, வெற்றிகரமாக மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்து நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.  கொரோனாவால் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் இம்மருந்து உகந்தது. அவசர உதவிக்காக முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மூன்று வாரங்களில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். இம்மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 51 சதவிகிதத்தினர் மூன்று நாள்களில் குணமடைந்துள்ளனர். தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாள்களில் குணமடைந்துள்ளனர். இந்த மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படாது.