நேரு யுவ கேந்திரா சர்ச்சை

நேரு யுவ கேந்திராவின் கேரள துணை இயக்குனர் அலி சப்ரின், மாப்ளா இனப்படுகொலையில் ஈடுபட்ட வாரியாகுன்னத் குஞ்சஹம்மது ஹாஜி உட்பட பலரை சுதந்திர போராட்ட தியாகிகளாக தவறாக சித்தரித்து நேரு யுவ கேந்திராவின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அதன் ஊழியர்களும் தன்னார்வலர்களும் கேள்வி கேட்டனர். அவர்களை அலி சப்ரின் மிரட்டி உள்ளார். குழுவில் யாரும் தன்னை குறைகூறாமல் இருக்க, நேரு யுவ கேந்திராவின் வாட்ஸ்ஆப் குழுவை அட்மின்கள் மட்டும் பதிவிடும் வகையில் மாற்றிவிட்டார். இது குறித்த புகார் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எச்.ஆர்) மாப்ளா கலவரம் சுதந்திர போராட்டம் அல்ல. இது, ஹிந்துக்கள் மீதான முஸ்லிம்களின் இனப்படுகொலை. இதில் ஈடுபட்ட வாரியாகுன்னத் குஞ்சஹம்மது ஹாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் பாரத சுதந்திர போராட்ட தியாகிகள் அகராதியிலிருந்து நீக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.