நீட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘neet.nta.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, ஆகஸ்ட்டு 10ம் தேதி இரவு 11:50 மணிவரை செலுத்தலாம். வரும் 11ம் தேதி முதல், 14ம் தேதி மதியம் 2 மணிவரை, ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.