இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கிக் கப்பல், போர் தடுப்பு பாதுகாப்புக் கருவிகள் தயாரிப்புகளுக்காக பாரதத்தை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. தொகுப்புகளுக்கான மஹிந்திரா பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ 1,349 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட முதல் பெரிய ஒப்பந்தமாகும். இந்த கருவிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பிடோக்களை வெகுதூரத்தில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை. மேலும் கப்பலைத்தாக்க வரும் டார்பிடோக்களை அழிக்க, திசைமாற்ற வல்லவை. மேம்பட்ட சிக்கலான சென்சார்கள் கொண்டு தயாராகும் இக்கருவிகளை சிறிய, நடுத்தர, பெரியது என அனைத்து அளவிலான போர்க்கப்பல்களில் பொருத்தி செயல்படுத்த முடியும்.