கிருஷ்ண பிரேமி சுவாமிகள் வேதனை

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற அரசின் திட்டம் குறித்து பேசிய பரனூரை சேர்ந்த ஸ்ரீ அண்ணா எனப்படும் கிருஷ்ண பிரேமி சுவாமிகள், கோவில்களில் மூலவரை தொடுவதற்கென்றே சிலர் உள்ளனர். மற்றவர்கள் தொட முடியாது. கடவுளை பாடிய ஆழ்வார்கள், ராமானுஜர், வானமாமலை, அகோபிலம் ஜீயர்கள், சங்கராச்சாரியார்கள் யாரும் தொட்டதில்லை. அரசர்கள், பீடாதிபதிகள் கூட மூலவர்களை தொட்டதில்லை. இவை அனைத்துமே ஏற்கனவே நியமிக்கப்பட்ட சம்பிரதாயங்களின்படியே நடக்கிறது. இந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இது பக்தி அல்ல வீம்பு. மக்களை நாத்திகர்களாக்கும் திட்டம் இது. அரசு இவ்வாறு செய்து மக்களை பேதப்படுத்துகிறது, முட்டாளாக்குகிறது. உங்களுக்கு அரசு தானாக கிடைக்கவில்லை. அந்த இறைவன்தான் கொடுத்தார். என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மக்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள். தற்போதுள்ள வழக்கத்தை மாற்றக்கூடாது என்றுதான் பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். கடவுள் இல்லை என்பவர் எத்தனை பேர்? ஹிந்துக்களை மிரட்டுவது என்பது உங்களுக்கு கரும்பு தின்பது போலதான். ஆனால், இதனை சமாளிக்கும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ராமானுஜர் காலம் தொட்டு எவ்வளோ பிரச்னைகளை நாங்கள் சமாளித்துள்ளோம். அந்த சர்வேஸ்வரன் எதையும் திருத்துவார். இதையும் திருத்துவார்’ என கூறியுள்ளார்.