விண்வெளியில் விவசாயம்

பூமியை தாண்டி புவிசூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை சர்வதேச விண்வெளி நிலையம் ஆராய்ச்சி நிறுவப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், அங்கு பச்சை மிளகாயை பயிரிட்டு வளர்த்து நாசா சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனம் 180 சென்சார்கள் உதவியுடன் களிமண்ணில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு பூமியில் உள்ளதை போன்றே நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இதனால் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிட்டன.  நாசா அனுமதி கிடைத்ததும் மிளகாய்களை விண்வெளி வீரர்கள் அறுவடை செய்வார்கள். அவர்கள் பயன்படுத்தியது போக எஞ்சிய மிளகாய்கள் ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். பூமியைத் தாண்டி பிற கோள்களையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் மனித இனத்தின் ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.