யார் இந்த யதி நரசிங்கானந்த்?

தஸ்னா தேவி கோயிலின் தலைமை பூஜாரியான யதி நரசிங்கானந்த் சரஸ்வதியின் தலையை துண்டிக்க வேண்டும் என்று முஸ்லிம் மதவாத அரசியல் கட்சிகள், பல முஸ்லிம் தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவரது தலையைத் துண்டிக்க வேண்டும் ஒவைசி கட்சியின் கான்பூர் அலுவலகம் உட்பட பல இடங்களில் இது பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யார் இந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி? இவ்வளவு நாட்களாக இவரது பெயர் ஊடகங்களில் அடிபடவில்லையே என சிலர் வினவலாம். இவரது இயற்பெயர் ‘தீபக் தியாகி’. இவர் ஒரு ரசாயனவியல் நிபுணர். ரஷியாவின் மாஸ்கோவில் தனது எம்.டெக் படிப்பை முடித்தவர். சிறு வயதிலிருந்தே ஏதாவது பெரியதாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது ஆழ்மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனால், பாரதம் திரும்பியவுடன் அரசியலில் குதிக்கலாம் என்றிருந்தார்.

இவரது பரம்பரையில், இவரின் தாத்தா உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹர் நகரில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்தவர். தந்தை மத்திய அரசு ஊழியர் சங்கம் ஒன்றின் முன்னாள் தேசிய தலைவர். அதனால்தானோ என்னவோ அரசியல் பற்றிய விழிப்புணர்வும், ஈடுபாடும் நரசிங்கானந்திற்கு இயற்கையிலேயே இருந்துள்ளது. இவரும், சமாஜ்வாதி கட்சியில் இணைந்து இளைஞர் பிரிவில் மாவட்ட தலைவராக இருந்துள்ளார்.

“சமாஜ்வாதி கட்சியுடனான எனது உறவும், தாத்தாவின் காங்கிரஸ் தொடர்பு, வெளிநாட்டு படிப்பு என இருந்ததால், ஹிந்துத்துவ தாக்கம் எல்லாம் எனக்கு அறவே இருந்ததில்லை. சொல்லப்போனால் ஹிந்துமதம் என்பது பழம் பஞ்சாங்கம் என்பது என் அபிப்பிராயம். மீரட்டில் இருந்து வந்தவன் என்பதால் எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்களும் உண்டு. ஆனால், பா.ஜ.க நிறுவன உறுப்பினரும் டெல்லி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பைக்குந்த் லால் சர்மா பிரேம்ஜியைச் சந்தித்த பின்னர்தான் ஹிந்துத்துவம் மீது எனக்கு ஈடுபாடு வந்தது. அவர்தான் முஸ்லிம்கள் செய்த பல அட்டூழியங்களை புரியவைத்தார்.

ஆனால், நான் ஒரு துறவியாக மாறி ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதற்கு, முஸ்லிம்களால் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு மாணவிதான் முக்கிய காரணம். அவள்தான் லவ் ஜிகாத்தின் கோரமுகத்தை எனக்கு புரிய வைத்தாள். உங்களுக்கும் ஒரு மகள் இருந்தால்தான் இந்த வேதனையை உணர்வீர்கள் என்றாள். பின்னர் இது குறித்து ஆராய்ந்த போதுதான் இதன் பயங்கரம் எனக்கு புரிந்தது.

ஹிந்து குடும்பத்தில் பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் மகள் மட்டுமல்ல, அவள் முழு சமூகத்திற்கும் மகள். லவ் ஜிஹாத்தால் ஹிந்து மகள்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து அறிந்திருந்தாலும், ஹிந்துக்கள் இன்னும் விழிக்கவில்லை. ஆனால், அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இதற்கு சரியான தலைவர்களை தேர்ந்தெடுப்பதும் அவசியம். அரசியல்வாதிகளும் இதனை உணர வேண்டும். நான் என்ன செய்ய முடியுமோ, அதை செய்கிறேன். நான் உயிருடன் இருக்கும்வரை அதை செய்வேன்” என்கிறார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி.