தாஜ்மஹாலில் அனுமதியின்றி நமாஸ்

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாஜ்மஹால் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இங்குள்ள ஷாஹி மசூதியில் வெள்ளிக்கிழமையன்று மட்டுமே முஸ்லிம்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். விதிவிலக்காக தாஜ்மஹாலை சுற்றியுள்ள தாஜ்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், கடந்த புதன் கிழமை எவ்வித அனுமதியும் இன்றி ஹைதராபாத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் உ.பி அசம்கரைச் சேர்ந்த ஒருவர்  அங்கு தொழுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகப்புப் படையினர் கைது செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் வகையில் தூண்டுதல்களை வழங்குதல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.