மதவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தீவிர இஸ்லாமிய மதவாதம் மற்றும் ஜிஹாதிகளுக்கு எதிரான மாநில அரசின் போராட்டத்தில் முஸ்லிம் மக்களை, குறிப்பாக வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை இணைத்துக்கொள்ளும் சோதனையை அசாம் அரசு தொடங்கியுள்ளது என்று கூறினார். மிகக் குறைவான ஹிந்துக்கள் உள்ள மாநிலத்தின் பல இடங்கள் எவ்வாறு உள்ளன என்பதை விளக்கி மாநில நிர்வாகத் திட்டங்களை விவரித்த முதல்வர், “இந்த இடங்களில், முஸ்லிம் சமூகத்தை பங்குதாரர்களாக, குறிப்பாக வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை ஈடுபடுத்துவதன் மூலம், ஜிஹாதி வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் தனியார் நடத்தும் மதரசாக்களை தீவிரமயமாக்கலில் இருந்து விடுபட்டு ஒரு நல்ல சூழலை உருவாக்குவதற்கு, கல்வியில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்ட பெங்காலி முஸ்லிம்களின் ஒத்துழைப்பு பெறப்படுகிறது. காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஒத்துழைத்து வருகிறார். மதரசாக்களுக்குப் பொறுப்பான நபர்கள், எதிரிகளாகப் பார்க்கப்படுவதை விட பங்குதாரர்களாக பார்க்கப்படுகின்றனர். மதரசாக்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பங்குதாரர்களுடன் அரசு இன்னும் எந்த ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்றாலும், விஷயங்கள் சரியான திசையில் நகர்ந்து வருகின்றன. மதரசா கல்வியை நவீனப்படுத்துவதற்காக அஸ்ஸாம் காவல்துறை மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படுகிறது” என் கூறினார்.