மாநிலங்கள் அவையில் இடம் பெற்றுள்ள நாகாலாந்தின் முதல் பெண் எம்.பி’யான ஃபாங்னான் கொன்யாக், நெய்பியு ரியோ, யாங்துங்கோபாட்டன், டி.ஆர். செலியாங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், ‘இது எனக்கு மறக்கமுடியாத நாட்களில் ஒன்று. ஏனெனில் நாங்கள் எங்கள் காலத்தின் மிகப்பெரும் ஜாம்பவான்களில் ஒருவரான பிரதமரை சந்தித்து அவரிடம் இருந்து விலைமதிப்பற்ற ஞான வார்த்தைகளைப் பெற்றோம். அவரது பொறுமையும் பாசமும் நீங்கள் அவர் முன்னிலையில் இருக்கும் தருணத்தில் உணரக்கூடிய சில குணாதிசயங்கள். அவருக்கு கவனிக்க வேண்டிய பல அலுவல்கள், பொறுப்புகள் இருந்தும், அங்கே, அப்போது, அந்த நேரத்தில் அவர் முழு கவனத்துடன் எங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் அந்த ஆற்றல் பொருந்திய அந்த புன்னகை அவரது முகத்தை விட்டு அகலவேயில்லை. நாகாலாந்து மட்டுமல்ல, முழு வடகிழக்குப் பகுதிகளுக்கும் அவரது இதயத்தில் உள்ள சிறப்பு இடத்தை அது வெளிப்படுத்தியது. அவரைச் சந்திப்பது நமது நலன்களில் அக்கறைக் கொண்ட ஒரு பாதுகாவலரைச் சந்திப்பதைப் போன்ற எண்ணத்தைத் தருகிறது. முழு வடகிழக்குப் பகுதியும் அவர் தலைமையில் அற்புத வளர்ச்சியைக் காண்பதில் ஆச்சரியமில்லை” என்று கூறினார். மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், “நாகாலாந்து மற்றும் வடகிழக்கு முழுவதுமான பிரதமரின் கனவு நனவாகும் என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளித்தார்.