குருத்வாராவில் மோடி வழிபாடு

சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்று குரு தேஹ் பகதூர் பிறந்த தினம். இதனையொட்டி தேசமெங்கும் உள்ள குருத்வாராக்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவரது 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று காலையில் எவ்வித முன் அறிவிப்பு இல்லாமல் கூடுதல் பாதுகாப்பு இல்லாமல் டில்லியில் உள்ள குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.