தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பாரதத்தின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் அமித் ஷா உள்ளார். 3வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளார். 4வது இடத்தில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவும், ஐந்தாவது இடத்தில் முகேஷ் அம்பானியும் உள்ளனர். சென்ற ஆண்டு பட்டியலில் 13வது இடத்தில் இருந்த யோகி ஆதித்யநாத் இம்முறை 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால் அதனை தவிடுபொடியாக்கி, 5 மாநில தேர்தலில் பா.ஜ.க 4 மாநிலங்களில் வென்றது. உக்ரைனில் சிக்கிய நமது நாட்டினரை வெற்றிகரமாக மீட்டது, கரோனா தடுப்பூசி வெற்றி, போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.