தெலுங்கானா மக்களுக்கு மோடி வாழ்த்து

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், காகதிய வம்ச மன்னர்களால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ராமப்பா கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மூலவர் ராமலிங்கேஸ்வரர். இந்தக் கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞர் ராமப்பாவின் பெயரால் இந்தக் கோயில் அறியப்படுகிறது. மத்திய அரசு கடந்த 2019ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெறுவதற்காக இக்கோயிலைப் பரிந்துரைத்தது. அதனை ஏற்று உலக பாரம்பரிய சின்னமாக இந்தக் கோயிலை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். காகதிய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனை ராமப்பா கோயில் வெளிப்படுத்துகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தைப் பார்வையிட வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி உள்ளிட்ட பலர் தெலுங்கானா மக்களுக்கு வழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.