தி.மு.கவின் பால்வளத்துறை அமைச்சரான நாசர், சமீபத்தின் தனது கழக உடன் பிறப்புகளை கல் எடித்து அடித்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சம்பவத்தை மக்கள் மறப்பதற்குள் மற்றொரு தி.மு.க அமைச்சர் தனது கட்சித் தொண்டர்களை மேடையிலேயே அடித்துத் துரத்திய ஸ்ம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.கவின் இளவரசரான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு மரியாதை செலுத்த வந்தவ அக்கட்சியின் தொண்டர்களை அக்கட்சியின் மாநில அமைச்சரும் மூத்த தலைவருமான கே.என்.நேரு, கழுத்தைப் பிடித்து தள்ளியும் முதுகில் அடித்துத் தள்ளியும் மேடையில் இருந்து வெளியேற்றும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பொதுமக்கள் தி.மு.கவினரின் இதுபோன்ற தொடர் செயல்பாடுகளை எள்ளி நகையாடி வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க அமைச்சர்கள் மக்களை அடிப்பதாக சபதம் எடுத்தது போல தெரிகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் கற்களை எறிந்தார், மற்றொரு அமைச்சர் இப்போது மக்களை தள்ளுகிறார். இவை அனைத்தில் இருந்தும் தினமும் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.