பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள பாரத தேசத்தவர்களை மீட்கும் ‘ஆபரேசன் கங்கா’ பணிகளை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு மிகவும் பொருத்தமான மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களும் தாமதிக்காமல் உடனே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடுகளுக்கு பயணப்பட்டுவிட்டனர். கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியா சென்றுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா ருமேனிய தலைநகரில் தரையிறங்கி மீட்புப் பணிகளை ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி விட்டார். இதேபோல, ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும் வி.கே.சிங் போலந்திற்கும் பயனப்படுகின்றனர்.