பா.ஜ.கவில் இணைந்த அமைச்சர்

மணிப்பூரில் ஆட்சி செய்யும் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் லெவ்பாட் ஹாவ்கிப். இவர் மணிப்பூரில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். அடுத்து வரவுள்ள மாநிலத் தேர்தலில், தேசிய மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவரும் மேகாலய முதல்வருமான கன்ராட் சங்மா தெரிவித்தார். இதனையடுத்து, லெவ்பாட் ஹாவ்கிப் அக்கட்சியை விட்டு விலகினார். மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முன்னிலையில் முறைப்படி பா.ஜ.கவில் இணைந்தார்.