அனைத்து சமூகத்தினருக்கும் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) மசோதா, ஹிந்து திருமணச் சட்டம், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்சி திருமணம், விவாகரத்து சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டம் ஆகிய ஏழு தனிப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துகிறது. இது பல சமூகங்களைச் சேர்ந்தவர்களின் திருமண வாழ்க்கையை பற்றியது என்பதால், இந்த ஏழு திருமணம் தொடர்பான சட்டங்கள் நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மக்களவையின் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே தலைமையில் புவனேஸ்வர் கலிதா (பா.ஜ.க), ஆர்.எஸ். பாரதி (தி.மு.க), தம்பிதுரை (அ.தி.மு.க), சுஷ்மிதா தேவ் (திருணமூல்), சந்தோக் சிங் சவுத்ரி (காங்கிரஸ்), அனுபவ் மொகந்தி (பி.ஜே.டி) உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்டு குழு இதற்காக நியமிக்கப்பட்டு உள்ளது.