டிஎன்பிஎஸ்சியில் மாவோயிஸ்ட் ஆதரவு பாதிரி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைவராக இருக்கிறார். இந்த தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிக்கு 12 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்பும் வகையில், நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதில் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.முனியநாதன், பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், முனைவர் கே. அருள்மதி மற்றும் ஏற்காடு டான் போஸ்கோ அருட்தந்தை ஏ. ராஜ் மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி வரலாற்றில் முதன்முறையாக பாதிரி ஒருவருக்கு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இவர் சலேசிய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்‌. ஏற்காட்டில் உள்ள டான் போஸ்கோ அமைப்பில் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு அண்மையில் உயிரிழந்த மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் ஆதரவாளர் ஸ்டேன் லூர்துசாமியின் நினைவாக பழங்குடியினரை குறிவைத்து நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் மத மாற்றத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை இழிவாக சித்தரித்து பேசும் திண்டுக்கல் லியோனி பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்த தி.மு.க, தற்போது நக்சல் ஆதரவாளரும் மதமாற்றத்தில் ஈடுபடுபவருமான ஒரு பாதிரியை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்த நியமனம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற அரசுப் பணியில் பாதிரி ஒருவரை நியமித்தது ஏன் என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுவே பா.ஜ.க இந்த இடத்தில் ஒரு ஹிந்துமதத் தலைவரை அமர்த்தினால் தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் எப்படி எதிர்வினையாற்றி இருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.