மமதாவின் உண்மை முகம்

பா.ஜ.க ஐ.டி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், திருணமூல் கட்சித் தலைவர் மமதா பேனர்ஜி, “நாம் இஸ்லாமை நம்பாத ஏமாற்றுக்காரர்களான ஹிந்துக்களுக்கு வருடத்தில் 365 நாட்களில் 364 நாட்கள் அனைத்து வசதிகளையும் வழங்கினாலும், அந்த ஒரு நாளுக்காக அவர்கள் நமக்கு வாக்கினை அளிக்க மாட்டார்கள். ஹிந்துக்கள் நம்பத்தகாதவர்கள். கடந்த 2019 தேர்தலில் அது வெளிச்சத்துக்கு வந்தது. மொத்தமிருக்கும் 4,500 வாக்குகளில் 500 வாக்குகள் நமக்குக் கிடைக்காது. மீதம் இருக்கும் 4,000 வாக்குகளைப் பெற அனைத்து உத்திகளையும் செயல்படுத்த வேண்டும். ஒருவரின் கையை இழுத்துப்பிடித்து வாக்களிக்கச் செய்வது அல்லது அவர்களின் காலில் விழுவது போன்ற அனைத்தையும் செய்யவேண்டும்” என்று ஹிந்துக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.