மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், தங்களை போன்ற உள்ளூர் பத்திரிகைகளுக்கு மாநில அரசு விளம்பரங்களை தராமல் புறக்கணிக்கிறது என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, ‘உள்ளூர் செய்தித்தாள்கள் அரசாங்க விளம்பரங்களைப் பெற விரும்பினால் எங்களை குறித்த நேர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும். எதிர்மறையான செய்திகளை நாங்கள் விரும்பவில்லை. செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து நீங்கள் எங்களை குறித்த நேர்மறை செய்திகளை வெளியிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். பிறகுதான் உங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்கும்’ என கூறினார். பத்திரிகை சுதந்திரத்தை பறித்து அதன் குரல்வளையை நெறிக்கும் விதமாக அவர் பேசிய இந்த பேச்சு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.