‘முஸ்லீம் வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அசாதுதீன் ஒவைசி போன்று ஹைதராபாத்தில் இருந்து யார் யாரோ வருகிறார்கள். ஒரு சிறுபான்மை வாக்குக்கூட பிரியக்கூடாது. ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்க எனக்கு 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் உரிமையைப் பயன்படுத்தும்போது அமைதியாக இருங்கள்’ என தற்போது முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்தும் அதனை நம்பியும் மட்டுமே தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பேனர்ஜி. நந்திகிராமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்கத்திலும் பெரிய அளவில் தோல்வியடைவோம் மமதா உணர்ந்துள்ளதாகவே அவரது இதுபோன்ற சமீபத்திய செயல்பாடுகள் உணர்த்துகின்றன.