அன்பு இதயம் உயிர்

இதய – ரத்தக் குழாய்களுள் அடைப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என உங்கள் மருத்துவர் சொன்னால் நீங்கள் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் மருத்துவர் சோதித்துப் பார்த்து நூறு சதவீத அடைப்பு இருக்கிறது எனில் என்ன பொருள்?

”இதயத்தில் ஏற்படும் இத்தகைய அடைப்புகள் ஒரே நாளில் வந்துவிடவில்லை. என்றோ ஏற்பட்டுவிட்ட இந்த அடைப்பினை இயற்கைப் பெரும்பாலும் மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து இதயத்தை செயல்பட வைக்கிறது ஆகவே, பைபாஸ் சர்ஜரிக்கு அவசரப்பட வேண்டாம்” எனச் சொல்கிறார், பெ.மோஹெகடே.
“நான் மருத்துவப் பணியைத் தொடங்கிய காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை சோதித்துப் பார்த்ததில் இதயத்தில் ஒன்றிரண்டு அடைப்புகள் இருந்தாலும் அவரிடம் நான் சொன்னேன் – நீங்கள் வழக்கம்போல செயல் படலாம்; அறுவைச் சிகிச்சை எல்லாம் வேண்டவே வேண்டாம் என்றேன்.

ஆனால், அவருடைய மகன்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘மேயோ கிளினிக்’கிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களும் நான் சொன்னதைத்தான் எழுதிக் கொடுத்துத் திருப்பி அனுப்பினார்கள். இன்றும் அவர் 94 வயதில் கூன் விழாமல் பொதுத் தொண்டாற்றி வருகிறார். நான் இப்படிச் சொல்வது கடந்த 30–40 ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகளினாலும் நிரூபணம் ஆகியுள்ளது” என்கிறார் ஹெகடே.

யார் இந்த ஹெகடே?
உடுப்பி, கர்நாடகாவில் ஆகஸ்டு 1938ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை ஸ்டான்லியில் இளங்கலை, லக்ஷ்மணபுரி, உபியில் முதுகலை மருத்துவம் படித்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் இதய சிகிச்சையில் மேற்படிப்பு முடித்துவிட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை செய்து வருகிறார். இன்று பல நம் / அயல்நாட்டு பல்கலைக் கழக மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல்வேறு நிலைகளில் வழிகாட்டி வருகிறார். பி.சி.ராய் விருது முதல் பல விருதுகள் பெற்றவர். அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்து கொண்டுள்ளது, இந்த ஆண்டு நம் பாரத அரசு அளித்துள்ள பத்ம பூஷண் கௌரவமும்.

சரி, அப்படியே விட்டுவிடலாமா?
“இதயநோய்க்கு எளிய மருந்து மனது எண்ணங்களை அன்பினால் நிரப்பிக்கொண்டு தானும் மகிழ்வுடன் இருந்து, சந்திக்கும் எல்லா ரிடமும் அன்பை வாரிவாரிக் கொடுப்பதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி. வருந்திக் கொண்டிருப்பவர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள். நீங்கள் கொடுப்பதுதான் உங்களுக்குத் திரும்ப வந்துசேரும், நான் (I) என்று சிந்திப்பதை நிறுத்தி, நாம் (We) என்று சிந்த்தித்துப் பழகுங்கள், வாழ்க்கை வளம்படும். I means Illness, We means wellness” என்று நிறைவு செய்கிறார் ஹெகடே. “நானாக வந்திங்கு நாமாக ஆனோம்” என்று ஆர்.ஆர்.எஸ் அமைப்புகளின் பல முகாம்களிலும் நாம் பாடும் பாடல் என் காதில் எதிரொலிக்கிறது.

-ஸ்ரீகிருஷ்ணா