மதுக்கடை திறப்பு கோயிலுக்கு பூட்டு

பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும். இந்தத் தலைமுறையில் செய்யும் தவறு, ஏழு ஜென்மங்களுக்கும் தொடரும். ஆண்கள் தர்மசீலர் என்றும், பெண்கள் தர்மபத்தினி என்றும் கூறப்படுவர். தர்மத்தின் வழியில் இருந்து தவறியதால், கொரோனாவால் அச்சப்பட்டு வருகிறோம். மதுக்கடைகள் திறக்கப்பட்டு, கோவில்கள் மூடப்படுகின்றன.நாகரிகம் எனும் பெயரில், நாட்டின் பாரம்பரியத்தை மறந்ததாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆடி அமாவாசை நாளில் முன்னோர் பூலோகத்துக்கு வந்து செல்வதாக ஐதீகம். அந்நாளில், கடவுளையும், முன்னோரையும் வழிபட்டு தர்மம் செய்வது அவசியம்’ என்று கூறினார்.