ஆளுனருக்குக் கடிதம்

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு,  கேரள பா.ஜ.க தலைவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தலையிடுமாறு பாஜகவின் கேரள பிரிவு கோரியுள்ளது. கேரள கம்யூனிச ஆட்சியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவகர் தேனேரி மண்டல் பௌதிக் பிரமுக் சஞ்சித் உட்பட 22 காரியகர்த்தாக்களை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இழந்துள்ளது. முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பான ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்’ அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வன்முறை கம்யூனிச அரசின் ஆதரவில் பெருகி வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் எங்கள் மூன்று காரியகர்த்தர்களை அவர்கள் கொடூரமாக கொன்றுள்ளனர். எஸ்.டி.பி.ஐ குற்றவாளிகள் தப்பிக்க அவர்கள் தங்கள் அமைப்பின் ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி உள்ளனர். மிகக் குறுகிய காலத்தில் எங்கள் மூன்று காரியகர்த்தர்களை அவர்கள் கொடூரமாக கொன்றுள்ளனர். காவல்துறை தனது விசாரணைகளை பெயரளவுக்கு மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. கேரள ஆளும் கட்சியான சி.பி.ஐ(எம்) மற்றும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கள் கைகோர்த்து இருப்பதும் ஊரறிந்த ரகசியம். கேரளாவில் தேசியவாத சக்திகளை அழிப்பதே அவர்களின் பொதுவான குறிக்கோள். எனவே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், சாமானியர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.