டுவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

கடந்த ஜூன் மாதம் உ.பி, காஜியாபாத்தில் உள்ள அப்துல் சமத் சைபி என்ற முஸ்லிம் நபர் தாக்கப்பட்டு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட வைக்கப்பட்டதாக ஒரு போலி வீடியோ பரப்பப்பட்ட வழக்கில், அரசு உத்தரவிட்டும் அந்த வீடியோவை நீக்காத டுவிட்டர் நிறுவனமும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டது. இவ்வழக்கில் டுவிட்டர் நிறுவன நிர்வாகி மனீஷ் மகேஷ்வரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, ‘அந்த வீடியோ சமூக ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு பரப்பப்பட்டது தெளிவாக தெரிகிறது. அதனை டுவிட்டர் நீக்கத்தவறியது தவறு. மனீஷ் தற்போது டுவிட்டரின் எம்.டியாக இல்லை என்றாலும் அதன் பிரதிநிதியாக இவ்வழக்கில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் காவல்துறை அவரை தாராளமாக கைது செய்யலாம்’ என உயே நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.