வெறுப்பு மனநிலையை கைவிடுங்கள்

மஹ்மூத் ஆசாத் மதானி, பதுருதீன் அஜ்மல் போன்ற இனவாத, தீவிரத் தலைவர்கள், தியோபந்தில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டில், “பாரதத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்ற அடிப்படையற்ற முழக்கத்தை எழுப்பி முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட முயசிக்கின்றனர். முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் காஷ்மீர் முதல் கேரளா வரையிலான தீவிர இஸ்லாமியவாத தலைவர்கள் ஒன்று கூடி, தங்களது ‘கஜ்வா இ ஹிந்த்’ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக பாரதத்தின் அரசியலமைப்பு, நீதித்துறைகளை எதிர்கின்றனர் என வி.ஹெச்.பி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

வி.ஹெச்.பியின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், ‘இஸ்லாமிய பிடிவாதத்தின் ஒரே மாதிரியான வார்த்தைகளும் மொழிகளும்தான் வெவ்வேறு நபர்களின் குரல்களாக அங்கு வெளிவந்துள்ளது. தலைவர்களின் குழப்பங்கள், திசைதிருப்பல் ஆகியவற்றின் விளைவுதான் இந்த வார்த்தைகள். மாப்லா கலவரத்தில் 20,000 அப்பாவி ஹிந்துக்களைக் கொன்று குவித்த கிலாபத் இயக்கம் மற்றும் ஜமியத் உலமா இ ஹிந்த்  இரண்டும் கி.பி 1919ல் உருவானவை. முஸ்லிம் தலைவர்கள் பிரிவினைவாதம், ஆக்கிரமிப்புவாதம், வெறுப்பு, அடக்குமுறை, பிடிவாதம், விரோத மனப்பான்மைகளை கைவிட வேண்டும்.

தீவிர இஸ்லாமியத் தலைவர்கள், அவர்களின் சட்டவிரோத கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளை மிரட்டி வந்தனர். பாரதப் பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதம் தெரிவித்தது இந்த பிளாக்மெயில் அரசியலின் விளைவுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீர்மானிக்கும் காரணியாக விளங்குவது பாரதத்தின் அரசியலமைப்பு சட்டம். அதனால்தான், முஸ்லிம்கள் மீது கொடுமைகள் நடப்பதாக பொய்க் கதைகளை பரப்பி, நாட்டில் வகுப்புவாத மோதலையும், கலவரத்தையும் உருவாக்குகிறார்கள்.

பாரதத்தில் உள்ள முஸ்லிம்கள், துன்புறுத்தப்பட்டவர்களா அல்லது ஆக்கிரமிப்பாளர்களா அல்லது அவர்கள்தான் துன்புறுத்துபவர்களா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில்கூட ஸ்ரீராம நவமி, மகாவீர் ஜெயந்தி, ஹனுமான் ஜெயந்தி போன்ற விழாக்களில் 50க்கும் மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழகம், ஹரியானா போன்ற பல பகுதிகளில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்,’லவ் ஜிஹாத்தில்’ சிக்கிக் கொள்ளும் ஹிந்து சிறுமிகள் மீதான மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள், கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அனைத்தும் ஒரு துன்புறுத்தப்படும் சமூகத்திற்கான அறிகுறிகள் அல்ல. மாறாக அவை ஆக்கிரமிப்பாளர் மற்றும் துன்புறுத்துபவர்களின் அடையாளங்கள்.

இத்தகையத் தலைவர்களின் தூண்டுதலால் இப்போது நீதித்துறையும் நேரடியாக அவமதிக்கப்படுகிறது. சி.ஏ.ஏ, ஹிஜாப், ஞானவாபி, அயோத்தி, மதுரா போன்றவற்றில் நீதித்துறையின் தீர்ப்புகளுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு நீதித்துறை களங்கப்படுத்தப்படுகிறது. ​​இந்தத் தலைவர்கள் தங்கள் சமூகத்தை இடைக்கால காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகள், நடைமுறைகளை நோக்கி வழிநடத்துகிறார்களா?

ஜின்னாவின் மொழியைப் பேசும் மஹ்மூத் ஆசாத் மதானியின் கலாச்சாரம் இந்த நாட்டிடம் இருந்து வேறுபட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. இருந்த போதிலும், பாரதத்தின் மீதான அன்பினால் தனது முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், பாகிஸ்தானுக்குப் போகாமல் இங்கேயே இருக்கத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் திரும்பத் திரும்ப கூறுகிறார்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் தனது “இந்தியா வின்ஸ் பிரீடம்” என்ற புத்தகத்தில், பாரதத்தின் பெரும்பாலான முஸ்லிம் சமுதாயம் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி இருந்ததாக எழுதியுள்ளார். 1946 தேர்தல்களில், பாரதத்தின் 90 சதவீத முஸ்லிம்கள்,  நியாயமற்ற வகையில் முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். அது தேசத்தை பிரித்து துண்டாக்கியது. அந்த பிரிவினையை ஆதரித்தவர்களில் 40 சதவீதம் பேர் இன்னமும் பாரதத்தில் நிலைத்திருப்பது உண்மையில் அவர்களின் பாரதத்தின் மீதான காதலால் தானா? ஆசாத் ஓவைசிகள், அப்துல்லாக்கள், முஃப்திகள் மற்றும் பிற தீவிர இஸ்லாமியத் தலைவர்களின் நடத்தைகள், அறிக்கைகளில் இருந்து இதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

பாரதத்தின் அரசியலமைப்பு, நீதித்துறை மற்றும் தங்கள் சொந்த சமூகத்தின் பெண்களுக்கும்கூட மரியாதை கொடுக்க அவர்கள் விரும்பவில்லை என்பதை தேவ்பந்தில் முஸ்லிம் தலைவர்களின் பேச்சுகளில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

முஸ்லிம் தலைவர்கள் ஷரியத் திணிப்பைக் கைவிட வேண்டும், முஸ்லிம் சமுதாயத்தை நீதித்துறை மற்றும் அரசியலமைப்பைப் பின்பற்றும் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் பூர்வீக வேர்கள் மற்றும் அனைவருக்கும் பொதுவான தேசிய பங்குகளை அவர்கள் அடையாளம் காண வேண்டும், வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் தவறான செயல்கள், எச்சங்கள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பைத் துறக்க வேண்டும். இதுவே அனைவரின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத சகவாழ்வுப் பாதையாகும்’ என தெரிவித்தார்.