மாஃபியாவின் பிடியிலிருந்து நிலம் மீட்பு

உத்தரபிரதேச சட்டசபையில், “2017ல் அமைக்கப்பட்ட பின்னர், மாஃபியாக்களால் அபகரிக்கப்பட்ட பொது, தனியார் நிலங்களை விடுவிப்பதற்காக நில எதிர்ப்பு மாஃபியா பணிக்குழு உருவாக்கப்பட்டது. அப்பணிக்குழு இதுவரை 67,000 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளது. மீட்கப்பட்ட நிலம் மாநிலத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்களை உருவாக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு விளையாட்டு மைதானங்கள் கிடைத்துள்ளன. நில மாஃபியாக்கள் பலர் அரசியல் தலைவர்களாக அல்லது அரசியல் கட்சிகளுடன் இணைந்தவர்களாக இருக்கின்றனர். அசம்கானின் குடும்பத்தினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜவஹர் பல்கலைக்கழக நிலம் மீட்கப்பட்டது. இதைத்தவிர, முக்தார் அன்சாரி, விகாஸ் துபே, பல எம்.எல்.ஏக்கள், மத போதகர்கள் போன்ற மாஃபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று முதல்வர் யோகி தெரிவித்தார்.