தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி இடத்தில், சுதர்சன சபா அமைந்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். 1927ல் திறக்கப்பட்ட இந்த சபாவில், இசை, ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த சபாவை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ராமநாதன், சபாவில் நடந்த நல்ல நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு அதனை மதுபான பார், ஹோட்டல், பேக்கரி, மொபைல் போன் கடைகள் நடத்த உள் வாடகை விட்டார். மாநகராட்சிக்கு வாடகையையும் செலுத்தவில்லை. மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மோசடியான தகவல்கள் இருந்ததால், ராமநாதன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்வாடகைக் கடைகள் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சுதர்சன சபா கட்டடத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மாநகராட்சி கையகப்படுத்தியது.