ரிக்க்ஷாவுக்கு பணம் கொடுக்கக்கூட வசதி இல்லாத நான் இன்று மத்திய அமைச்சர் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். ‘ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை யாரும் மத்திய அமைச்சராக்கியதில்லை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார். எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க செய்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த என்னை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.கவின் கட்சி கூட்டத்திற்கு சாதாரண தொண்டனாக திருப்பதிக்கு பஸ்ஸில் வந்துள்ளேன். ஆனால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள், என்னை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க முயன்ற பொழுது கங்ணம் கட்டிக்கொண்டு தடை செய்தனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சியில் 28 பேரை மத்திய அமைச்சர்களாக ஆக்கியது பா.ஜ.க. இது பா.ஜ.கவில் மட்டுமே சாத்தியம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.