பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூர் பகுதியில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. சீக்கிய மத குருவான குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு பாரதத்தில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் வருடந்தோறும் யாத்திரை செல்வர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த குருத்வாரா மூடப்பட்டிருந்தது. வரும் செப்டம்பர் 22ல் குருநானக்கின் நினைவு தினம் அனுசரிக்கப்படும். அன்று இந்த குருத்வாராவில் சீக்கியர்கள் வழிபாடு நடத்த வருவதற்கு ஏதுவாக பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஒரே நேரத்தில் 300 பேருக்கு மட்டுமே குருத்வாராவில் அனுமதி, பாகிஸ்தான் அரசிடம் இதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும், விமானத்தில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என பல கட்டுப்பாடுகள் இதற்கு விதிக்கப்பட்டுள்ளன.