ஹிஜாப் பின்னணியில் ஜிகாதிகள்

வி.எச்.பியின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், வெளியிட்டுள்ள அறிக்கையில் “தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உண்மையில் ஹிஜாப் என்ற போர்வையில் ஜிகாதி அராஜகத்தை பரப்புவதற்கான முயற்சி. இதனை ‘ஹிஜாப் ஜிஹாத்’ என்றுதான் சொல்ல முடியும்.

உடுப்பியில் உள்ள ஒரு பள்ளியில், 6 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல முயன்ற விவகாரம் என்பது தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு துவக்கப்புள்ளி. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) போன்ற ஜிகாதி அமைப்புகள், கர்நாடகம் முழுவதும் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்க பெரிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளன.

பாகல்கோட் போன்ற பல இடங்களில் ஜிஹாதிகள் நடத்திய வன்முறைகள் இதற்குச் சான்று. ஹிந்து சமுதாயமும், தேசத்தின் குடிமக்களும் விழிப்புணர்வோடு இருந்து அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

முஸ்லிம் நாடுகளும், உலகம் முழுவதிலும் உள்ள பயங்கரவாதக் கும்பல்களும் இதற்கு எதிர்வினையாற்றிய வேகம், பாரதத்தில் அக்கிரமத்தையும் குழப்பத்தையும் உண்டாக்க அவர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அவர்கள் கர்நாடகாவில் ஷாஹீன் பாக் வன்முறையை பிரதிபலிக்க விரும்புகிறார்கள் போலும்? கர்நாடக அரசின் கண்காணிப்பு, தேசியவாத சமூகத்தின் விழிப்புணர்வின் காரணமாக அவர்கள் தங்களின் ஜிஹாதி முயற்சியில் வெற்றிபெற முடியாது என்பதை வி.ஹெச்.பி  தெளிவுபடுத்த விரும்புகிறது.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மறைமுகமாக ஆதரவளித்ததால்தான் அவர்களால் சி.ஏ.ஏ வன்முறை போராட்டம் நடத்தி மக்களை துன்புறுத்த முடிந்தது.

துரதிருஷ்டவசமாக சில மாணவிகள், இந்த சதித்திட்டத்திற்கு உடந்தையாகிவிட்டனர். மாணவர்கள் விதிகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் மட்டுமே பள்ளியில் கல்வி கற்பதற்கான இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆரம்பத்தில் இந்த மாணவிகள் சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வந்தனர். ஆனால், திடீரென ஹிஜாப் அணிவதில் அவர்கள் காட்டிய வெறித்தனம், ஆக்ரோஷம் எல்லாம், இது ‘கஸ்வா இ ஹிந்த்’ ஜிஹாதி திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது.

இதை ஆதரிப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் கும்பல், ஹிந்து சமுதாயத்தை அவமானப்படுத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டனத்திற்குரியது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், காலியாக இருந்த கொடிக்கம்பத்தில் காவிக்கொடியை மாணவர்கள் ஏற்றியதை தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக தவறாக சித்தரித்துள்ளார். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற விரக்தியின் வெளிப்பாடு இது. ஜிஹாதிக் கலவரம் அவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்பட்டதா என்பதை சோனியா காந்தி தெளிவுபடுத்த வேண்டும்

ஜிகாதி சக்திகளும், காங்கிரசின் டூல்கிட் கும்பலும் நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகளை உருவாக்க முயற்சிக்கின்றன என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. இந்த ஜிஹாதி தீயை நாடு முழுவதும் பரப்பும் எண்ணமும் துணிவும் அவர்களுக்கு வராமல் இருக்க, இந்த சதிகளை அம்பலப்படுத்தி, சட்டப்படியான  நடவடிக்கைகளை உறுதியாகக் கையாளுமாறு கர்நாடக அரசுக்கு வி.எச்.பி வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.