இயேசு அலைக்கிறார் கும்பலின் மோசடி

மத பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக 1960ல் உருவான அமைப்பே ‘இயேசு அழைக்கிறார்’. 1935-ல் சாதாரண குடும்பத்தில் சுரண்டையில் பிறந்த தினகரன், 1972ல் வங்கி ஊழியர் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்கினார். 1980-க்குப் பிறகே இவர் தனியாக ஜெப நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தினார். தினகரனுக்கு அயல் நாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது.

அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மத பிரசங்கங்களைத் தமிழகம் முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், `இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காணிக்கை என்ற பெயரில் கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பதே கள்ளப் பிரசங்கி – டி.ஜி.எஸ். தினகரனின் பணி. இந்த பணிக்கு அவரது மகன் பால் தினகரன், மனைவி, மகள், மருமகள், பேத்திகள் மொத்த குடும்பமும் இந்த மோசடியின் மூலம் இந்தியப் பணக்கார குடும்பங்களில் ஒரு குடும்பமாகி விட்டது. இந்த கள்ளப் பணக்கார குடும்பம், சென்னை துறைமுக வாசலுக்கு எதிரே பெரிய தொழில் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களின் கட்டிடங்களும் உள்ள பகுதியில் விலை மதிப்பே சொல்ல முடியாத இடத்தில் எல்.ஐ.சி. கட்டடம் போல ஒரு பிரமாண்டமான பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டியுள்ளார்கள்.

காருண்யா பல்கலைக்கழக கல்லூரி வருமானம் பல நூறு கோடி ரூபாய் வருகிறதா என்ற கேள்வியை கூட எவரும் கேட்கவில்லை. 1983ல் கோவையில் (750 ஏக்கர்) ஆரம்பித்த காருண்யா கல்வி நிறுவனம் ஏழைகளுக்கு கல்வி கொடுக்கவே என மேடைக்கு மேடை பேசி நன்கொடை பெற்றார்! தற்போது அதிக பணம் வசூலிக்கும் கல்வி நிறுவனமாக தான் எழுந்து நிற்கிறது! தான் படித்த மேலாண்மைக் கல்வியை பயன்படுத்தி பால்தினகரன், அதன் மூலமாக பணம், நிலம், அதிகாரம் பெருக துவங்கியது. ரெயின்போ டிவி 8 மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாதம் 1800-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை வழங்குகிறது. 750 ஏக்கருக்கு மேல் கோவையில் காருண்யா கல்வி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள காருண்யா கல்வி அறக்கட்டளையின் அதிபர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக, தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். அந்தப் பதவியின் மூலம் ஏகப்பட்ட கிறிஸ்தவர்களை வேலையில் அமர்த்த மறைமுகமாக லாபி செய்து வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு பால் தினகரன் மீது உண்டு.

டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் தினகரனுக்கு அந்தப் பட்டத்தை வழங்கியது ஜெர்மனியைச் சேர்ந்த ‘மாரநாதா ஜெப சபை’ என்ற மத நிறுவனம். மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவில் இவர் இருக்கிறார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் ஆட்சி அதிகாரக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். இவை அனைத்தும் மத்திய அரசின் கல்வித் துறையால் நேரடியாக நியமிக்கப்படுவது. மத்திய காங்கிரஸ் அரசில் இவரின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்றால், மத்திய அமைச்சர் பல்லா, இவரிடம் நாடாளுமன்றம் நன்றாக நடக்க நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிதி மோசடியில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் பொய்ப் பிரமாண பத்திரம் கொடுத்த வசந்தி ஸ்டான்லி 2010-ல் எழுதிய கடிதத்தில் அவரின் தலைவரின் தேர்தல் வெற்றிக்குப் பிரார்த்தித்துக் கொள்ள சொல்கிறார். காங்கிரஸின் ராம்சுப்பு எம்.பியும் சில கோரிக்கைகளை பிரார்த்தனைகளாக்க முன்வைக்கிறார்.

பால் தினகரன் நடத்தும் ‘இயேசு அழைக் கிறார்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் 126 பிராத்தனை மையங்கள் உள்ளன. இந்த அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் பால் தினகரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தினார் என்று சட்ட உரிமைகள் ஆய்வகம் குற்றம் சாட்டியுள்ளது. பால் தினகரனின் கோக் வீல் டிரஸ்ட், பெனியல் அனாதை இல்லம், பக்லி அனாதை இல்லம், போன்ற நிறுவனங்களுக்கு குழந்தைகள் பேணி பாதுகாக்க அந்நிய நாட்டு என்.ஜி.ஓ.க்களால் கொடுக்கப்பட்ட ரூ 40 கோடியை, தனது சொந்த நலனுக்காக 900 ஏக்கர் வன நிலத்தை கையகப்படுத்த செலவு செய்ததாகவும், பெரா சட்டத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியை முறையாக செலவிடாமலும், அதற்குறிய கணக்குகளை அரசுக்கு சமர்பிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான என்ஜி.ஓ.க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த பட்டியலில் பால் தினகரனின் சில என்.ஜி.ஓ.க்களும் அடக்கமாகும். பால் தினகரன் நடத்தும் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

2007–2008-ம் வருட வருமான வரி கணக்கு தாக்கல் சம்பந்தமாக ஒரு வழக்கு நடந்தது. ரூ98,22,31,253க்கு அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டு, வாங்கப்பட்ட நிலத்தை சரி செய்வதற்கு ரூ14,00,00,000 அதற்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் மூலம் வங்கப்பட்ட சொத்தில் வரி விலக்கு அளிக்க முடியாது. ஏன் என்றால் ரூ 14 கோடிக்கு செலவு செய்த வகைக்கு உரிய ஆவணங்கள் கிடையாது என வருமான வரி ஆணையர் தள்ளுபடி செய்து விட்டார். எவ்வாறு 98 கோடிக்கு சொத்து வாங்க நிதி கிடைத்தது என்பதை ஆய்வு செய்தால், வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதியை பயன்படுத்தினார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும். காருண்யா பல்கலைக்கழத்திற்கு அருகில்உள்ள நிலங்களை கையகப்படுத்திய விவகாரமும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. கணக்கு மோசடியில் மற்றொருநிகழ்வு, வருமான வரி கணக்கு தாக்கலில் அறக்கட்டளையின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் சம்பளம் எடுக்க கூடாது என விதியிருந்தும், பால் தினகரன் சம்பளமாக ரூ20,37,000-ம், அவரது மனைவி இவலிஞ்சனுக்கு ரூ4.80 லட்சமும், அவரது குழந்தை Earnest க்கு ரூ3.60 லட்சமும், எழுதப்பட்டிருந்தது. வருமான வரித் துறை யினர் மேற்படி கணக்கில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியது. பால் தினகரனின் மற்றொரு மோசடி, குடும்ப ஆசீர்வாத பங்குதாரர் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிராத்தனை செய்ய ஒரு குடும்பத்திடம் வாங்கும் நிதி எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ரூ3,000, இலங்கையில் ரூ5,000, சிங்கப்பூர் 350 டாலர், மலேசியா 800 ஆர்.எம்., கனடா 400 சிஏடி, ஜெர்மனி 200 ஈரோ, சீனா 1950 யென் என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையில் மாதந்தோறும் நிதி வசூலிக்கப்படுகிறது. மற்றொரு விதமான மோசடி, இன்டர்நெட்டில் பிரார்த்தனை செய்வது. தினசரி சராசரியாக 36,000 பேர்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காணிக்கை என்பது தெரியவில்லை. இதுவும் ஒரு வகையான மோசடி. காணிக்கை பெறும் மற்றொரு நிகழ்வு, ஒன்பது நாடுகளில் 24 மணி நேரமும் நடத்தப்படும் Prayer intercessor offer prayer நடத்தப்படுகிறது. திராவிட அரசியல்வாதிகளின் சுயநலனுக்காக யானை போகும் பாதையை ஆக்கிரமித்துக்கொண்ட பால் தினகரன் ஆக்கிரமித்த 936 ஏக்கர் நிலத்தை காலி செய்ய சுற்றுசூழல் அமைச்சகம் உத்திரவிட்டும் கூட உள்ளுர் அரசியல்வாதிகளின் உதவியுடன் இதுவரை காலி செய்யவில்லை. Legal Right Observatory என்ற அமைப்பு, டிசம்பர் 3, 2020ம் தேதி வருமான வரித் துறையின் தலைமை கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், Complaint seeking immediate and elaborate inquiry and subsequent action to be taken against the large scale criminal money laundering offences like tax evasion and embezzlement by a proxy NGO Samiti for education, Environment, Social and Health Action ( SEESHA ) of one Paul Dhinakaran என குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பஹாரியா சேவ சமிதி என்ற பெயரில் உள்ள என்.ஜி.ஓ.விற்கு இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டியன் ஏய்ட் லிருந்து வந்த ரூபாய் 9.55 கோடி நிதியானது மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே நிறுவனம் பால் தினகரனின் ‘இயேசு அழைக்கிறார்’ நிறுவனத்திற்கும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மத மாற்றத்திற்காக அந்நிய நாட்டிலிருந்து வந்த நிதியை பயன்படுத்தி பல மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தலித் மக்களை மதமாற்றம் செய்ய உறுதுணையாக பால் தினகரனும், அவரது குடும்பமும் செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பாதகம் செய்யும் பால் தினகரன்
* ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பிற்கு இணையம் மூலம் வந்த நிதியிலிருந்து சுமார் 600 கோடி ரூபாய் ஒரு திராவிட கட்சிக்கு வழங்கியதாக தகவல்.
* நொய்யல் ஆற்று வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள காருண்யா பல்கலைக் கழ கத்தின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
* சரியான கட்டமைப்பு இல்லை என கூறி யூ.ஜி.சி. 2017-ல் பல்கலைக் கழகத்தை மூட உத்திரவிட்டது.
* மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ‘நல்லூர் வயல்’ என்ற கிராமத்தின் பெயரை ‘காருண்யா நகர்’ என தன்னிச்சையாக மாற்றியவர்.