சேவாபாரதியின் தனிமைப்படுத்தும் மையங்கள்

டெல்லியில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் அடிப்படை சிகிச்சைகள் கிடைப்பது கடினம் மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்ட நிலையில், பல்வேறு சமூகங்களுடன் இணைந்து கொரோனா தனிமை மையங்களை துவங்கி மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சேவா பாரதி செயல்பட்டு வருகிறது. தற்போது, அசோக் விஹார், உதசீன் ஆசிரமம், நரேலா, துவாரகா, ஹரிநகர், அமர் காலனி, லஜ்பத் ​​ஆகிய ஆறு இடங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை சேவாபாரதி டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த தனிமைப்படுத்தும் மையங்களில் 450 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில், மேலும் 9 மையங்கள் துவங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தேவையான ஆக்ஸிஜன் வசதி கிடைத்தால், அடுத்த சில நாட்களில் அதை ஆயிரம் படுக்கைகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. அனைத்து 6 தனிமை மையங்களிலும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. தற்போது மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளியை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள், மைக்குகள் நிறுவப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு உணவு, காபி, தண்ணீர், மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.