மாணவர்களை தடுக்கிறதா உக்ரைன்?

பாரதத்தை சேர்ந்த சில மாணவர்கள் உக்ரைன் ராணுவத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு மனிதக் கேடயங்களாகப் பயன்படுதுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து பாரத மாணவர்களை அவசரமாக வெளியேற்ற தாங்களும் முயற்சிப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. எனினும், உக்ரைனில், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, மாணவர்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், பாரத மாணவர்களை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற உதவுவதற்காக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ரஷ்ய எல்லை பகுதிகளில் வசிக்கும் பாரத மாணவர்கள் அங்கிருந்து நடந்தாவது (சுமார் 25 கி.மீ தூரம்) ரஷ்ய எல்லையை அடைந்து விட்டால் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.