சில்லறை விற்பனை பணவீக்கம் குறைவு

பாரதத்தின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச பணவீக்க இலக்கான 6 சதவீதத்திற்கும் கீழாக வந்துள்ளது, அதுவும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் வந்துள்ளது என்பது நல்லதொரு முன்னேற்றமாகவும் பாரதப் பொருளாதாரத்திற்கும் சாதகமான காரணியாக பார்க்கப்படுகிறது. சில்லறை பணவீக்க விகிதம் குறைந்துள்ளதற்கு, காய்கறிகளின் விலை, உணவு பொருட்கள் விலை குறைந்துள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.77 சதவீதமாக இருந்தது. இது கடந்த நவம்பரில் 5.88 சதவீதமக குறைந்தது. டிசம்பர் மாதத்தில் மேலும் குறைந்து 5.72 சதவீதமாக உள்ளது. மார்ச் 2026 உடன் முடிவடையும் ஐந்தாண்டு காலத்திற்கு சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்தில் பராமரிக்க வேண்டும். அது 6 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்காமலும் 2 சதவீதத்திற்கு கீழாக குறையாமலும் பராமரிக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.