ஆப்கானிஸ்தானில் உள்ள பாரத அரசின் தூதரகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த பாரத அரசு முடிவு செய்துள்ளது, அதற்காக 35 இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கனில் 300 கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கமாண்டோக்களும் தானாக முன்வந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விரைவில் அங்கு பணிக்கு செல்வர் என இந்தோ திபெத் எல்லை காவல்படைத் தலைவர் கிருஷ்ணா சௌத்ரி கூறினார். முன்னதாக, இந்த படைப்பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் பணியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.