சத்தீஸ்கர் அரசு, அம்மாநில விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு கிலோ பசுஞ் சாணத்தை 2 ரூபாய்க்கு வாங்குகிறது. அதனை 354 சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 4,000 பெண்களைக் கொண்டு அந்த பசுஞ்சாணத்தில் இருந்து உரம், வரட்டி, விளக்கு, பூந்தொட்டி போன்றவை தயாரித்து விற்பனை செய்கிறது. ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த பொருட்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் நல்ல வரவேற்பை இது பெற்றதையடுத்து அவற்றை ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாயிலாக விற்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும்கூட, விற்பனை துவங்கிய சில நாட்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, விசாயிகளுக்கும் அதிக வருவாய், சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.