அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பாரதத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ) 27.37 பில்லியன் டாலராக உள்ளது. வருடாந்திர அடிப்படையில் இது 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பாரதத்தில் அந்நிய நேரடி முதலீடு 16.92 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் எப்.டி.ஐ ஈக்விட்டி இன்ஃப்ளோ 112 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வருட காலாண்டில் இது 9.61 பில்லியன் டாலராக இருந்த இது, தற்போது 20.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் (ஜூலை, 2021 வரை) அன்னிய நேரடி முதலீடு அதிகம் பெற்ற மாநிலங்கள் வரிசையில் கர்நாடகா 45 சதவிகிதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளன. ஆட்டோமொபைல்துறை அதிக முதலீட்டை ஈர்த்துள்ளது.