நேரடி வரி வசூல் அதிகரிப்பு

நிகழும் நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 17.09.2022 வரையிலான நிலவரப்படி நிகர வசூல் ரூ. 7,00,669 கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே  காலப்பகுதியில் வசூலான ரூ. 5,68,147 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 23 சதவீதம் அதிகமாகும். 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட வருமான வரித் தாக்கல்களில் கிட்டத்தட்ட 93 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளின் செயலாக்க வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட ரீஃபண்டுகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 468 சதவீதம் அதிகரிப்புடன் விரைவாக பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.