கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சரவை குழுவினர் ஆய்வு நடத்தினர். தயாரிப்பை அதிகரிப்பது, அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து அந்த நிறுவன அதிகாரிகளுடன் மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இதன்படி, கோவாக்சின் தயாரிப்பை வரும்மே, ஜூன், மாதத்திற்குள் இரண்டு மடங்காக உயர்த்த ஏதுவாக, மூன்று பொதுத்துறை நிறுவனங்களில், அதன் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன. இது நிறைவேறும்பட்சத்தில், வரும் செப்டம்பருக்குள், மாதந்தோறும் 10 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.