இழிவான அரசியல் செய்யும் திருமா

ஒருவர் இறந்தால் அவரின் வாழ்விற்காகவோ, அவர் செய்த நல்ல பணிகளுக்காகவோ, அவரின் குடும்பத்திற்காகவோ நல்ல மனம் படைத்த மனிதர்கள் இரக்கப்படுவார்கள். ஆனால் யார் இறந்தாலும் அதில் ஆதாயம் தேடுவதற்கும் அரசியல் செய்வதற்கும் சில கொடூர மனம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நேற்று மாரடைப்பின் காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், அவரது ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ‘நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி’ என இரங்கல் தெரிவிக்கிறேன் என்கிற பெயரில் தனது மலிவான அரசியல் எண்ணத்தை புகுத்தியுள்ளார். மத்திய அரசின் மீது இவர் வைத்துள்ள வன்மத்தை இப்படி ஒருவருடைய இறப்பிலுமா காட்டுவார் என பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவிற்கும் திருமாவளவனே கொரோனோ தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்திக்கொண்டவர். தடுப்பூசி போட்டுக்கொண்டு தனக்கு ஏதும் ஆகவில்லை என உணர்ந்தும்கூட, இப்படி அவர் கருத்து தெரிவிப்பது அவரின் உண்மை குணத்தையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.