தேர்தல் நெருங்கி வரும் வேலையில், எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க, தங்கள் கட்சியின் சின்னம் போட்ட, ஸ்டாலின் படம் உள்ள காலண்டர், வாகன ஸ்டிக்கர் போன்றவற்றை தன் ஆதரவாளர்கள் மூலம் மக்கள் கூடும் இடங்களான கடைகள், முடி திருத்தும் இடங்கள் போன்றவற்றில் வைத்து, அக்கடைகாரர்களை தி.மு.கவின் ஆதரவாளர்களாக காட்டவும், மறைமுகமாக ஓட்டு சேகரிக்கவும் பயன்படுத்துகிறது. பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரம், விளம்பர பதாகைகலை மட்டுமே தேர்தல் ஆணையம் அழிக்கும் அல்லது மறைக்கும். ஆனால் இது போன்று கடைகளின் உட்பகுதிகளில் உள்ள விளம்பரங்களை அகற்றாது. இதை நன்றாக அறிந்த தி.மு.க வழக்கம்போல தன் குறுக்கு புத்தியை பயன்படுத்தி சுய விளம்பரங்களை தி.மு.க செய்து வருகிறது. பொதுமக்களும் இதனை அறியாமல் இல்லை.