புலம் பெயர்ந்தோர் வேண்டுகோள்

சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 2 முதல் திருணமுல் கட்சி குண்டர்கள், அக்கட்சி ஆதரவு முஸ்லிம்கள் போன்றோரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் 20 க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர், ஹிந்துக்கள் உயிர் இழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடுகள், கடைகள் எரிப்பு, சொத்துக்கள் கொள்ளை என பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றன. உயிர் பயம் காரணமாக லட்சத்திற்கும் அதிகமானோர் அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உலகெங்கிலும் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் வாழும் புலம் பெயர்ந்து வாழும் பாரத தேசத்தவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அந்த மாநிலத்தில் நிகழும் அரசியல் வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.