உலகம் முழுவதும் கொரோனா நோயால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பாரதம் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. உலகில் கொரோனாவை எதிர்கொள்வதில் பாரதம் முன்னிலை வகிக்கிறது. தடுப்பூசி உற்பத்தி கொள்கை முடிவுகளில் பாரதம் தனித்து நிற்கிறது. உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் பாரதம்தான் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.