ஐ.ஐ.டி கூட்டு ஆராய்ச்சி

காற்று மாசுபாடு, ஏ.எம்.ஆர் / எம்.டி.ஆர் தொற்று பாக்டீரியா, தொற்றுநோய், நோயெதிர்ப்பு, உடல்நலம், பொருளாதாரம், சமூக-பொருளாதார, பாலின சமத்துவமின்மை, போன்ற தரவுகளை ஆராயவும் கல்வி ஆராய்ச்சி, மனித வள மேம்பாட்டில் கவனம் செலுத்தும் நோக்கத்திற்காகவும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) டெல்லி, அசோகா பல்கலைக்கழகம் இணைந்து ஒரு பொதுதளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்தானது. இந்த கூட்டு ஒப்பந்தம் அறிவு பரிமாற்றம், பயனுள்ள ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கும் என அசோகா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மலபிகா சர்க்கார்  தெரிவித்தார்.