ஹொய்சாள கோயில்கள் பரிந்துரை

யுனெஸ்கோவுக்கான பாரதத்தின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா, உலக பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில், மத்திய அரசு இறுதி செய்த ஹொய்சால கோயில்களுக்கான பரிந்துரையை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் இயக்குநர் லாசரே எலவுண்டூவிடம் முறைப்படி சமர்ப்பித்தார். கர் நாடக மாநிலத்தை ஆண்ட ஹொய்சால அரசர்கள் அங்கு 20க்கும் மேற்பட்ட கலைநயம் மிக்க கோயில்களை கட்டியுள்ளனர். இவை தற்போது தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் பட்டியலில் உள்ளன. இதில் தற்போது பேலூர், ஹலேபிட் மற்றும் சோமநாதபுராவில் உள்ள ஹொய்சாள கோயில்கள் இந்த பரிந்துரைக்காக இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவால் இந்த ஆண்டு இதற்கான தள மதிப்பீடு அக்டோபரில் நடைபெறும், ஆவணம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளா மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, ‘விகாஸ்’ (அபிவிருத்தி) மற்றும் ‘விராசத்’ (பாரம்பரியம்) இரண்டிற்கும் உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்தார்.