தாயகம் வந்த ரூ. 6.22 லட்சம் கோடி

வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகை குறித்த பட்டியலை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதில், கடந்த 2020ல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்தியாவுக்கு ரூ. 6.22 லட்சம் கோடி அனுப்பியுள்ளனர். இந்த பட்டியலில் சீனா ரூ. 4.46 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாக்., பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.