ஹிந்தி நீக்கம் உருது திணிப்பு

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் அரசு, அம்மாநிலத்தில் வேலைக்கான தேர்வுகளுக்கான மொழிகளில் ஒன்றாக உருது மொழியை திணித்துள்ளது. அது அங்கு 5 % மட்டுமே பேசப்படுகிறது. அது அங்குள்ளவர்களுக்கான பழங்குடி மொழியும் அல்ல. ஆனால்  அதே சமயம் 62 % மக்கள் பேசும் மொழியாகவும் தேசிய மொழியாகவும் உள்ள ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் நீக்கியுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் பழங்குடியினர் மொழியாக மாகஹி, போஜ்புரி, மைதிலி, அங்கிகா உள்ளிட்ட மொழிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதில் போஜ்புரி மொழியை மட்டும் சுமார் 20 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்த காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி செய்துவரும் ஹேமந்த் சோரன் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது அம்மாநில மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஜார்க்கண்ட் அரசின் இந்த முடிவு, அம்மாநிலத்தின் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.