ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு

கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 அக்டோபரில் இதே வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் தற்போது இவ்வழக்கை மூன்று பேர் அமர்வுக்கு பரிந்துரைப்பதாக தலைமை நீதிபதி  டிஒய் சந்திரசூட் தெரிவித்தார். மாணவிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா, “கர்நாடகாவில் அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை இருப்பதால் பல மாணவிகள் தனியார் கல்வி நிலையங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் கல்லூரி தேர்வுகளை அரசு கல்வி நிலையங்கள் தான் நடத்த முடியும். தேர்வுகள் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகின்றன. எனவே, இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டியலிட வேண்டும். விரைந்து விசாரித்து இடைக்கால உத்தரவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதி சந்திரசூட், “இந்த மனுவை பரிசீலித்து விசாரணைக்கான தேதி ஒதுக்கப்படும். நீங்கள் நீதிமன்ற பதிவாளரிடம் இதுகுறித்து முறையிடுங்கள்” என கூறினார்.