வீடு தேடி வரும் சுகாதார திட்டம்

மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற ஆரோக்கிய பராமரிப்பு சேவை திட்டத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை ஒரு குடும்பம் இலவசமாகப் பெறலாம். இந்த திட்டம் பிப்ரவரி1ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பீஹார், உ.பி., ம.பி., சத்தீஸ்கர், பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், வீடு தேடி வரும் சுகாதார திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இதர மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்தாண்டு, 1.2 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.